Saturday, May 1, 2010

Philosophical,Religious,Traditional Discussions MAY 2010

You are free to post here your views, what ever good subject you have studied and matters of interest.Any thing not conforming to the decorum of this column will be removed by the blog administrator.Be a self editor.Do not hurt any ones feelings. Genuine and gentle matters are the ones I want.

3 comments:

  1. "LAW OF KARMA
    -------------The answer to the oft-repeated question,"Why do good people suffer?"becomes clear when we understand the the operation of the law of karma and reincarnation. The law of karma is the law of cause and effect. Every effect must have a cause.The effect we see now must have a cause, recent or remote. Whatever happens to me today has cause behind it. You will get concrete proof for this when you practice silence and enter the depths within you." .......................................
    Dada J.P. Vaswani

    ReplyDelete
  2. சிவகங்கை : வறுமையின் கோரத்தால், மூன்று பெண் குழந்தைகளை தவிக்க விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தையில்லாமல் ஆதரவின்றி மூன்று பெண் குழந்தைகள் தத்தளிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராமாயி (30). காயத்ரி (9), கவுசல்யா (8), ரதி (3), கவுரி (1) என, நான்கு குழந்தைகள். ராமாயி, கடைசி குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த நிலையில், நாகராஜன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார்.

    இதுவரை அவரை பற்றி தகவல் இல்லை.கையில் மூன்று குழந்தைகள், கர்ப்பத்தில் ஒன்று என, சுமைகளுடன், வறுமையின் கொடூரத்தையும் சுமந்தார் ராமாயி. கூலி வேலையில் கிடைக்கும் சொற்ப தொகையில், இவர்களின் இருட்டு வாழ்க்கை தொடர்ந்தது. வறுமையின் கோரப்பிடி இறுகியதால், கடைசி குழந்தையை, அவரது தங்கைக்கு தத்து கொடுத்தார்.சிவகங்கை, கூட்டுறவுபட்டி அருகே செவல்பட்டியை சேர்ந்த விஜயா என்பவர், இவருக்கு அவ்வப்போது உதவிகள் செய்தார். 'இனி வாழ வழி இல்லை' என முடிவு செய்த ராமாயி, கடந்த 11 ம் தேதி, விஜயா வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தார். விஜயா வெளியில் சென்ற போது, ராமாயி தூக்கிட்டு இறந்தார்.

    தந்தையின் முகம் மறந்து, தாயின் அரவணைப்பில் இருந்த குழந்தைகள், தற்போது நாதியின்றி தத்தளிக்கின்றன. உறவினர்களும் கைகொடுக்காத நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்கொலை வழக்கை விசாரித்த சிவகங்கை உதவி எஸ்.பி., சந்திரா சோனல், குழந்தைகளை, தேனி மாவட்டம் ஜி.கல்லுப் பட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முயற்சி எடுத்துள்ளார்.இக்குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற விரும்புவோர், '04575 240 428' என்ற எண்ணில், சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளலாம்.

    ReplyDelete
  3. வைராக்கியத்துடன் படிச்சேன்; ஜெயிச்சேன்!
    -------------------------------------------
    ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வாகியிருக்கும் கார்த்திக் மாணிக்கம்: மூணாவது படிக்கிறப்ப ஒரு மணல் லாரி விபத்தில், என் கால் போயிடுச்சு. அதன்பின் எல்லாமே போராட்டம் தான். விபத்துக்குப் பின் செயற்கைக் கால் வச்சாங்க. இன்று வரை எனக்கு செயற் கைக் கால் தான். ஊனத்துடன் நான் போன இடங்களில் பார்த்த விஷயங்கள், என்னை ரொம்பவே பாதிச்சது. அவமானம், உதாசீனம், புறக் கணிப்புன்னு ஒவ் வொரு வார்த்தைகளுக்குரிய அர்த்தத்தை உணர ஆரம்பிச்சேன்.வீட்டுல எவ்வளவு கஷ்டம்னாலும், என்னைப் படிக்க வைக்கிறதுல என் அப்பா மாணிக்கம் குறையே வச்சது இல்லை. அவர் சேமிப் பில் தான் பி.இ., முடிச்சேன். அம்மா வள்ளி இன்னமும் என்னை குழந்தையாத்தான் பார்த்துக்கிறாங்க. என் தம்பி பாஸ்கர், என் நண்பன் மாதிரி. இப்படிப்பட்ட குடும்பத்துல நான் தான் முதல் பட்டதாரி.அப்பா மாணிக்கம், சென்னை சேப்பாக் கம் வேளாண்மைத் துறையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கார் டிரைவரா இருக்கார். வீட்டுல அடிக்கடி பொருளாதாரச் சிக்கல் எழும். ஆனா, அந்த பாரத்தை எங்க மேல காண்பிக்கவே மாட்டார். எங்க இரண்டு பேரையும் நல்லா படிக்க வச்சார்.என் காலேஜ் சீனியர், சக்ரவர்த்தி தான், ஐ.ஏ.எஸ்., ஆசையை எனக்குள் விதைத்தார். ஐ.ஏ.எஸ்.,க்காக 2007ல் தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் படிச்சேன். அதுக்கு பலன் கிடைச்சிருக்கு.ஒரு ஐ.ஏ.எஸ்., ஆபீசரின் கார் டிரைவர் மகன், ஐ.ஏ.எஸ்., ஆகி இருக்காருங்கறது எல்லாருக்கும் சந்தோஷந்தான். ஆனா, என் ஒரு காலே போன சூழ்நிலையிலும் நம்பிக்கை வச்ச அப்பாவின் மன வலிமையைத் தான், நான் இன்னமும் மிகப் பெரிய சாதனையா நினைக்கிறேன். வைராக்கியத்துடன் தொடங்கப்படும் எந்தச் செயலும் வீழ்ந்ததா சரித்திரமில் லைன்னு சொல் வாங்க. வைராக்கியத்துடன் படிச்சேன்; ஜெயிச்சேன்.
    Courtesy:Dinamalar

    ReplyDelete